திங்கள், 17 ஆகஸ்ட், 2015

இன்றைய கட்டுரையில் நாம் Auto Levels பற்றி பார்க்கஇருக்கிறோம்


வணக்கம் பிட் மக்கா நலமாஇன்றைய கட்டுரையில் நாம் Auto Levels  பற்றி பார்க்கஇருக்கிறோம்.பொதுவாக போட்டோஷாப்பில் பலராலும் பயன்படுத்தப்படும் ஒரு டூல் எதுஎன்றால் அது Levels  எனலாம்.பொதுவாக Levels என்பது நமது படத்தின் Tonal rangeமற்றும் Color Balance சரி செய்துகொள்ள உதவும் ஒரு டூலாகும். 

** அதாவது உங்களுடைய படத்தின் Histogramமை வைத்துShadows,Midtones,Highlights பாயிண்டுகளை தேவைக்கேற்றபடி அட்ஜெஸ்ட் செய்துபடத்தை திருத்திக்கொள்ளலாம்.




அல்லது Levelsல் இருக்கும் Black,Gray,White Eyedropper டூலினைக்கொண்டு உங்களதுபடத்திலிருக்கும் கருப்பு,வெள்ளை மற்றும் கிரே புள்ளிகளை கண்டறிந்துதிருத்திக்கொள்ளலாம்.

ஆனால் இதனை செய்ய போட்டோஷாப்பில் போதிய அனுபவம் வேண்டும்காரணம்தவறான புள்ளிகளை தேர்ந்தெடுத்துவிட்டால் படம் கெட்டுவிடும்சரி இதுகுறித்தவிபரமான கட்டுரையை நான் பின்னாளில் தருகிறேன்.

இப்போதைக்கு போட்டோஷாப்பை ஆரம்பநிலையில் ழகுபவர்களுக்கு ஏதுவானதாகஇருக்கவேண்டும் என்பதற்க்காக நான் Auto Levels பற்றி குறிப்பிட இருக்கிறேன்.
அதாவது கருப்பு மற்றும் வெள்ளைபுள்ளிகளை பயன்படுத்தத்தெரியாதவர்கள் மற்றும்Levels மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யதெரியாதவர்கள் Auto Levels நாடலாம்.

முதலில் நீங்கள் Correction செய்ய விரும்பும் படத்தை போட்டோஷாப்பில்திறந்துகொள்ளவும்.இங்கு உதாரணத்திற்கு நான் திறந்து வைத்திருக்கும் படமானது மாலைவெயிலில் எடுக்கப்பட்ட படமாகும்


இங்கு என்னுடைய படத்தில் இருக்கும் Yellow நிற Colorcast சற்று இருப்பதை நான்பார்கிறேன்சரி இப்போது லேயர் பேனலில் இருக்கும் New Levels Adjustment Layerதேர்ந்தெடுக்கவும்.


இப்போது Levels பேனலில் இருக்கும் Auto என்பதை அழுத்தவும்.


பெரும்பாலும் Auto Levels எல்லா படத்திற்கும் நாம் எதிர்பார்க்கிற ரிசல்டை தருவதுகிடையாது.இந்த படத்திற்கு நான் Auto Levelsஐவல்ஸைபயன்படுத்தியிருக்கிறேன்.எனினும் ரிசல்ட் எனக்கு திருப்தியாக இல்லை.காரணம் இந்த Auto Levels ஆனது பொதுவாக உங்களுடைய படத்திலிருக்கும் Brightness மற்றும் Contrast வைத்து மேம்படுத்துமாறு Default ஆக‌ வடிவமைக்கப்பட்டிருக்கும்சரி இந்த Auto Levesஐகொஞ்சம் Fine Tune செய்து பார்க்கலாமா?

இப்போது நான் அதே Auto பட்டனை என்னுடைய விசைபலகையிலிருக்கும் ALT அழுதிக்கொண்டு கிளிக் செய்கிறேன்.

இப்போது போட்டோஷாப் Auto Levels எனக்கு மொத்தத்தில் 4 விதமான Alogorithms எனக்குஅளிக்கிறதுஇப்போது நீங்கள் 4 ஆப்ஷன்களையும் சோதித்துப்பாருங்கள்உங்களுடையபடம் எந்த Algorithm அடிப்படையில் நீங்கள் விரும்பிய ரிசல்ட் தருகிறதோ அதனைதேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
என்னுடைய இந்தப்படத்தில் எனக்கு Find Dark&Light Colors Option நல்ல ரிசல்டைதருகிறது எனவே நான் அதனை தேர்வுசெய்துகொள்கிறேன்.அதே நேரத்தில் படத்திலிருக்கும்Color Cast ஐயும் நான் நீக்க விரும்புகிறேன்எனவே நான் Snap Neutral Midtonesஸையும்டிக் செய்கிறேன்.


இப்போது பாருங்கள் என்னுடைய படம் Auto Levels மூலமாக Color Cast நீக்கப்பட்டுமேம்படுத்தப்பட்டிருக்கிறது.


என்ன "பிட்" வாசகர்களே Auto Levelsஸை எப்படி நேர்த்தியாக பயன்படுத்துவது எனகற்றுக்கொண்டீர்களா??
நன்றி மீண்டும் ஒரு கட்டுரையில் சந்திக்கலாம்.

கருத்துகள் இல்லை: